நகர நலவாழ்வு நிலையங்களில் கொரோனா நோயாளிகளுக்குத் தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும் -தமிழக அரசு தலைமை செயலாளர்

0 498
நகர நலவாழ்வு நிலையங்களில் கொரோனா நோயாளிகளுக்குத் தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும்

நகர்ப்புற நலவாழ்வு நிலையங்களில் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் சிகிச்சைக்குச் சென்றுவரத் தனி வழி ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புறங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஏதுவாகக் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் சென்றுவருவதற்கு நகர்ப்புற நலவாழ்வு நிலையங்களில் தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் தொற்று நோய் இல்லாத நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் வெவ்வேறு நேரங்களில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த நகர நலவாழ்வு நிலையங்களில் கிருமிநாசினி தெளிப்பதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments