11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

0 3216
11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது அதே நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 104 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுபலத்த காற்று வீசும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் வடமேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் அடுத்த 5 நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments