பல கட்டுப்பாடுகளுடன் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து சென்ற விமான பயணிகள்

0 1246
பல கட்டுப்பாடுகளுடன் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து சென்ற விமான பயணிகள்

நாடு முழுவதும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து இன்று தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று தொடங்கியது.விமானப்போக்குவரத்து தொடங்கியதால் விமானநிலையங்களில் பயணிகள் தனிநபர் இடைவெளிகளுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து பயணிகளும் முகமூடி அணிந்தும், கிருமி நாசினிகளால் கை கழுவிய பின்னரே விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருந்தனரா என சோதனையும் நடத்தப்பட்டது.

இருப்பினும் விமானங்களில் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. அடுத்தடுத்த இருக்கைகளில் பயணிகள் அமரவைக்கப்பட்டிருந்தனர்.இருப்பினும் பயணிகள் அனைவரும் முககவசங்களை அணிந்திருந்தனர். சிலர் கையுறைகளை அணிந்து இருகைகளில் அமர்ந்திருந்தனர்.நாடு முழுவதும் ஆயிரத்து 200 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் பயணிகள் வருகை குறைவால் 600 விமானங்களே இயக்கப்பட்டன.

இதனிடையே, ஆந்திராவில் நாளை முதலும், மேற்கு வங்கத்தில் வரும் 28ம் தேதியன்றும் விமானப்போக்குவரத்து தொடங்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே விமான சேவையைத் தொடங்க மகாராஷ்டிரா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், குறைந்த அளவு விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments