புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு

0 644
புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

தமிழக விலைக்கு நிகரான விலையுடன் புதுச்சேரியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்றும், இந்த வரி விதிப்பு அடுத்த 3 மாதங்கள் வரை அமலில் இருக்கும் என்றும் கலால்துறை அமைச்சர் நமசிவாயம் நேற்று தெரிவித்தார்.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என்றும், ஒரு நபர் நான்கரை லிட்டர் வரை மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். மதுவாங்க வருவோர் முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, புதுச்சேரி அரசு வெளியிட்ட அரசாணையில் புதுச்சேரி, காரைக்காலில் மதுபானங்கள் (liquors) மீது 25 சதவீதமும், சாராயத்துக்கு (Arracks-- பட்டை சாராயம்) 20 சதவீதமும் சிறப்பு கொரோனா கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments