இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகத்தின் 17 தொழிற்பேட்டைகள்

0 656
இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகத்தின் 17 தொழிற்பேட்டைகள்

இரண்டு மாதங்களுக்குப் பின், கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகத்தின் 17 தொழிற்பேட்டைகள் இன்றுமுதல் இயங்க உள்ளன.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உட்படாத 17 தொழிற்பேட்டைகளும், அந்த பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தினமும் இரு முறை தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்க அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments