இ-பாஸ் கிடைக்காததால் இருமாநில எல்லையில் நடந்த திருமணம்

0 10364
இ-பாஸ் கிடைக்காததால் இருமாநில எல்லையில் நடந்த திருமணம்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கேரளாவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் இருமாநில எல்லையில் அவருக்கு பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற அந்த இளைஞருக்கும், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கேரளாவில் நடக்க இருந்தது.

ஆனால் பிற மாநிலத்திற்கு செல்லும் இ-பாஸ் பதிவு செய்தும் மாப்பிள்ளை வீட்டாருக்கு கிடைக்கவில்லை. இதனால் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தமிழக - கேரள எல்லையான குமுளிக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு காவல் அதிகாரிகள் முன்னிலையில் மணமக்கள் இருவருக்கும் நிச்சயிக்கபட்ட நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments