ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ந்தேதி வரை ரத்து

0 623
ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ந்தேதி வரை ரத்து

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் அடுத்த மாதம் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 4 ஆம் கட்ட பொது முடக்கம் சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் மாதம் பொது முடக்கம் விலக்கப்பட்டவுடன் தரிசனம் அமல்படுத்த தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments