கொரோனா பிடியில் தமிழகம் நீடிக்கும் உச்சம் தொடரும் அச்சம்

0 5827
கொரோனாவின் இறுகிய பிடிக்குள் சிக்கி உள்ள தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கொரோனாவின் இறுகிய பிடிக்குள் சிக்கி உள்ள தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் பிடி, நாளுக்கு நாள் இறுகி, பாதிப்பும் , உயிர்ப்பலியும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஒடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்ட போதிலும், தமிழகத்தில் கொரோனா, அடங்க மறுத்து, தாறுமாறாக எகிறி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 47 பேர் அடங்குவர். எனவே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திருவள்ளூரைச் சேர்ந்த 65 வயது ஆண், செங்கல்பட்டை சேர்ந்த 50 வயது ஆண் மற்றும் 46 வயது மற்றொரு ஆண் என 3 பேர், ஒரே நாளில் உயிரிழந்தனர்.

சென்னை - தனியார் மருத்துவமனைகளில் முறையே 57, 62 மற்றும் 68 வயதில் 3 ஆண்கள் கொரோனாவுக்கு இரை ஆனார்கள். சென்னையை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும், 52 வயது ஆண் ஒருவரும் ஸ்டான்லி மருத்துவமனை யில் மரணம் அடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்ததால், பலிஎண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்கள் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். பெண்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் மொத்தம் 7 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8 ஆயிரத்து 324 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 833 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 461 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் சுமார் 5 ஆயிரம் பெண்கள் உள்பட சுமார் 14 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 518 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 358 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மிரட்டும் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டும் பணியில் சுகாதாரத்துறையினர், தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments