பெங்களூரில் இன்றும், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்

0 1407

பெங்களூரில் இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதால் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இன்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் என இரண்டு நாட்கள் இந்த முழு ஊரடங்கு இருக்கும்.

அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி , மருந்துகள் , பெட்ரோல், குடிநீர், ஏடிஎம் போன்ற சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மதுக்கடைகள், தொழிற்சாலைகள், சலூன்கடைகள் போன்றவை மூடப்பட்டிருக்கும். இன்றைய தினம் பேருந்து போக்குவரத்து இருக்காது .ஆட்டோ டாக்சிக்கும் அனுமதி கிடையாது. திருமணம், இறப்பு போன்றவற்றுக்காக சிறப்பு அனுமதி பெற்று செல்லலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments