நாடு முழுவதும் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு

0 614

இந்தியா முழுவதும் 4 கோடி பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலீலா ஸ்ரீவத்ஸவா செய்தியாளர்களிடம் பேசும்போது,  இதுவரை, 35 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், 40 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 11 ஆயிரத்து 92 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் இணைச் செயலாளர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments