சென்னை நீங்கலாக தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்கக் கோரிக்கை

0 3552

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ஏசி அல்லாத 4 சிறப்பு ரயில்களை தமிழகத்திற்கு இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்திற்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரயில்வே எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில், சென்னை நீங்கலாக, ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை கோயம்புத்தூர் - மயிலாடுதுறை, மதுரை- விழுப்புரம் வழித்தடங்களில் இயக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருச்சி-நாகர்கோவில், கோயம்புத்தூர் - காட்பாடி வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், மற்ற மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது போல் தமிழகத்திலும் விரைவில் குளிர்சாதன வசதி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments