உயிரோடு உடலை பூமிக்குள் புதைத்து பூஜை..! கொரோனா நீங்க வேண்டுதலாம்

0 9668

கொரோனா உலகத்தை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காக சாமியார் ஒருவர் தனது உடலை பூமிக்குள் புதைத்துக் கொண்டு சுற்றிலும் தீவைத்து பூஜை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. 

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை ஒழிக்க போவதாக கூறி, தூத்துக்குடியை சேர்ந்த சாமியார் சீனிவாசன் என்பவர் தனது பிரத்தியங்கிரா தேவி கோவிலில் தனி ஆளாக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தி உள்ளார்.

கோவிலில் குழி தோண்டி அதனுள் இறங்கிய சாமியார் சீனிவாசன், தனது உடல் முழுவதையும் பூமிக்குள் புதைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, தன்னை சுற்றி நெருப்பை எரியவிட்டு மந்திரங்களை உச்சரித்தபடி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

பூமிக்குள் உடலை புதைத்துக் கொண்டு பூஜை செய்வதன் மூலமாக கொரோனா உலகத்தை விட்டே ஓடிவிடும் என்று நம்புகிறார் இந்த சாமியார் சீனிவாசன்...

கடந்த வருடம் ஊருக்குள் மழை பொழியவைப்பதாக கூறி 100 கிலோ மிளகாய் வத்தலை தீயிலிட்டு எரித்து சாம்பலாக்கி சம்பவம் செய்தவர் சாமியார் சீனிவாசன்

அதே போல கிலோ கணக்கில் பாகற்காயை வெட்டி குங்குமம் தடவி அவற்றை தீயிலிட்டு யாகம் செய்த சாமியார் சீனிவாசன், அம்மன் வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கே.ஆர்.விஜயாவை அழைத்து வந்து தனது கோவிலில் சாமி கும்பிடவைத்தது எல்லாம் இவரது ஆன்மீக வரலாறு..!

கொரோனாவை விரட்ட இந்த அளவுக்கெல்லாம் ரிஸ்க் வேண்டாம். பொது இடத்தில் சமூக விலகலுடன் எதை தொட்டாலும் கைகழுவி, முககவசம் அணிந்து விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்தாலே கொரோனா பரவலை எளிதாக தடுக்க முடியும்..! என்கின்றனர் மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments