அதிரும் உலகம்.. தொடரும் கொரோனா பாதிப்பு..!

0 1237
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. சுமார் 22 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிப்பு 16 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 36 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 98 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.

2 - வது இடத்திற்கு முன்னேறிய பிரேசிலில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டனர்.

ரஷியாவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட, இங்கிலாந்தில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

சிலியில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ஸ்பெயின், இத்தாலி, சவுதி அரேபியா, மெக்சிகோ, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்தது.

பாகிஸ்தான், கத்தார், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் ஆக்டோபஸ் கரம் நீண்டு உள்ளது.

கொரோனாவால் உலக அளவில் 53 லட்சத்து 97 ஆயிரம் பேர் வரை, பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3 லட்சத்து 43 ஆயிரத்து 600 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர்.

உலகம் முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய போதிலும், 54 ஆயிரம் பேர், கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments