கொரோனாவுடன் இன்னும் 2 மாதகாலம் போராட வேண்டியிருக்கும்-மத்திய சுகாதார அமைச்சகம்

0 2340

இந்தியா இன்னும் இரண்டு மாதகாலம் கொரோனாவுடன் போராட வேண்டியிருக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளை குறைப்பதற்கு மருத்துவ வசதிகள், தனி படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் கருவிகள் போன்றவை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றது. மகாராஷ்ட்ரா ,தமிழ்நாடு,குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 11 நகராட்சிகளில் இருந்துதான் கொரோனா 70 சதவீதம் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பரவல் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மும்பை போன்ற நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments