மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,608 பேருக்கு கொரோனா ; 60 பேர் பலி

0 1198
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 608 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 910ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் இன்று ஒரே நாளில் 60 பேர் பலியானதை அடுத்து, கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 577ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 821 பேர் கொரோனாவிலிருந்து  குணமாகியுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 404ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments