சென்னையை உலுக்கும் கொரோனாவின் புதிய உச்சம் ...மக்கள் அச்சம்...

0 4391
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 625 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 625 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

உலுக்கும் கொரோனாவால் சென்னையில் கடந்த 5 நாட் களாக வைரஸ் தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 500 பேருக்கு மேல், கொரோனா வால் பாதிக்கப்பட்டனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 625 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை, இதுவே அதிகபட்ச பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை, தமது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.செங்கல்பட்டில் ஒரே நாளில் 39 பேர் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 22 பேருக்கும், காஞ்சியில் 13 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுதவிர, திருவண்ணாமலையில் 10 பேர் பாதிக்கப்பட, தூத்துக்குடியில் 5 பேரும், விழுப் புரத்தில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலம், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.அதேநேரம், மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை .

சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 865 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, 4 ஆயிரத்து 51 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவுக்கு இரை ஆன 103 பேரில், சென்னையில் மட்டும் 72 பேர் உயிரிழந் துள்ளனர். திருவள்ளூரில் 8 பேரும், செங்கல் பட்டில் 6 பேரும் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 82 சதவீதம் பேர், சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments