மீண்டும் புதிய உச்சம் நாடு முழுவதும் உலுக்கும் கொரோனா

0 4342
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் அதிகரித்து வந்த போதிலும் சுமார் 52 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். ஆனால், ஒரே நாளில், 6 ஆயிரத்து 654 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் அதிகரித்து வந்த போதிலும் சுமார் 52 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். ஆனால், ஒரே நாளில், 6 ஆயிரத்து 654 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் சூரத் உள்பட 10 மாநகரங்களிலும் கொரோனாவின் பாதிப்பு, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனாவின் பாதிப்பு, 45 ஆயிரத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து 2- ஆவது இடம் வகிக்கிறது.

3- வது இடம் வகிக்கும் குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 300 ஐ நெருங்கி வருகிறது.

டெல்லியை பொறுத்தவரை,கொரோனாவால் சுமார் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனாவின் பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், பஞ்சாப், கர்நாடகா,தெலங்கானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், மொத்தம்16 மாநிலங்கள் இடம் வகிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 654 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக ஒரே நாளில் 137 பேர் உயிரிழந்தனர்.

6 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, ஒரே வாரத்தில் இது 2 முறையாகும். இந்தியாவில் இவ்வாறு, 6 ஆயிரம் பேருக்கு மேல் ஓரே நாளில்
வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது 3 முறை நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் 69 ஆயிரத்து 697 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை, சுமார் 52 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments