தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அட்டவணை ரத்து

0 1103

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.

2020-22ம் ஆண்டிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை கடந்த ஏப்ரல் 17ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாகவும், சங்க உறுப்பினர்கள் அவகாசம் கோரி தொடர்ந்த வழக்கில் 3 மாத காலம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டதான் காரணமாகவும், ஏப்ரல் 17ம் தேதி வெளியான தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தேர்தல் அட்டவணை, கடிதம் அல்லது வாட்சப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments