நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை

0 544970
நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை

பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் பெங்களூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி குழந்தைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய அவர் தனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு வாய்ப்புகளைக் கருதி சென்னை வீட்டுக்குச் செல்லாமல் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆனூர் கிராமத்தில் தங்கள் பூர்வீக வீட்டில் தனது தந்தை டாக்டர் கருணாகரனுடன் தங்கி இருந்தார்.

மாதக்கணக்கில் மனைவி குழந்தைகளை பார்க்க முடியாததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டின் பின் புறத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments