பிரபல நகை அடகு நிறுவனத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டி கொள்ளை

0 1869

திருப்பூரில் பிரபல நகை அடகு நிறுவனத்தில் புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி, மர்மநபர் கொள்ளையடித்து சென்ற சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் மாநகர் பகுதியிலுள்ள குமரன் சாலையில் அட்டிகா கோல்டு லோன் நிறுவனக் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அந்த கடைக்குள் நுழைந்த ஹெல்மெட் அணிந்த நபர், அங்கிருந்த ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 சவரன் நகைகளை பறித்து சென்றான். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

இந்த காட்சிளை ஆய்வு செய்த போலீசார், ஏற்கனவே பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய அழகுராஜ் என்பவன் தான் இந்த கொள்ளையிலும் ஈடுபட்டதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments