தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

0 3211

தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு படிப்படியாக நிதியை விடுவித்து வருகிறது என்றாலும், கேட்ட நிதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பு, குடிமராமத்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது என்றார்.

சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேருக்கு  உறுதி செய்யப்பட்டது என்றும், அவர்கள்  சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது சேலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்கள், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் 67 கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூலம், நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

கோடைகாலம் என்பதால், குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை, குறிப்பிட்ட பகுதிகளில்தான் நோய்த்தொற்று உள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

எஸ்சி பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கைக்காக அரசின் மீதும், முதலமைச்சர் மீதும் மு.க.ஸ்டாலின் பழிபோடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மத்திய அரசு நிதியுதவிகளை படிப்படியாக வழங்குகின்றது, கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை என செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.

விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments