இந்தியாவில் கொரோனா பாதிப்பு.. 1.25 லட்சத்தை தாண்டியது..!

0 1022
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒன்னே கால் லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒன்னே கால் (1.25 லட்சம்) லட்சத்தை தாண்டியுள்ளது. கொடிய தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 720ஆக அதிகரித்துள்ளது. அதிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு மற்றும் தீவிர தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 6 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 137 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், இதுவே அதிகபட்ச பாதிப்பாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 101ஆக அதிகரித்துள்ளது. அக்கொடிய தொற்று நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 720ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் 69 ஆயிரத்து 597 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுதவிர்த்து 51 ஆயிரத்து 784 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.  

நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 582ஆகவும், பலி எண்ணிக்கை ஆயிரத்து 517ஆகவும் உயர்ந்துள்ளது. 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 753ஆகவும், பலி எண்ணிக்கை 98ஆகவும் அதிகரித்துள்ளது.

3ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 802ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தையும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் 6 ஆயிரத்தையும், உத்தர பிரதேசத்தில் 5 ஆயிரத்தையும் கடந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments