ராஜஸ்தானில் இருந்து உ.பி.க்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

0 391

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறுவடைக் கால பயிர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் வயல்களில் வெட்டுக்கிளிகள் குவியத் தொடங்கும். அண்டை நாடான பாகிஸ்தானிலும் இப்பிரச்சினை உள்ளது. வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்காகவும் ஒழிப்பதற்காகவும் பூச்சிக் கொல்லி மருந்துகளை விநியோகித்து வரும் அதிகாரிகள் விவசாயிகளுடன் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வயல்களில் முரசு அறைந்து சத்தம் எழுப்பியும் புகை மூட்டத்தை எழுப்பியும் வெட்டுக்கிளிகளை விரட்டுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூச்சி மருந்து தெளிப்பதற்காக  50 டிராக்டர்கள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் ஆக்ராவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments