ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை இயற்றியுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

0 1203

ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசு வசம் எடுத்துக் கொள்ளவும், அதை நினைவில்லமாக மாற்றுவதற்கான அறக்கட்டளையை உருவாக்கவும் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக்கப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதை நிறைவேற்றும் வகையில், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நீண்ட கால ஏற்பாடுகளை செய்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையை உருவாக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைக்கு முதலமைச்சர் தலைவராகவும், துணை முதலமைச்சர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் இருப்பார்கள் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments