ஏப்ரல் 30 -மே 12 வரை 66 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்-மத்திய அரசு

0 696

ஏப்ரல் 30 முதல் கடந்த 12 ஆம் தேதி வரையிலான காலத்தில் 66 லட்சம் பேர் அயல் மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கிய புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஏதுவாக மத்திய அரசு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களையும், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது.

இந்த வகையில் ஏப்ரல் 30 முதல் மே 6 ஆம் தேதி வரை27 லட்சத்து 15 ஆயிரம் பேரும், மே 7 முதல் 12 ஆம் தேதி வரை 39 லட்சத்து 71 ஆயிரம் பேரும் சொந்த மாநிலம் திரும்பியதாக அரசு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பதால் தொழிலாளர்கள் பீதிக்கு ஆளாகி வேறு மார்க்கங்களில் சொந்த ஊர் செல்வதை தவிர்க்குமாறும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments