பாகிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 97 பேர் உயிரிழப்பு

0 2045

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று நேரிட்ட விமான விபத்தில் 97 பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

லாகூரிலிருந்து சென்ற அந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த சில நிமிடம் முன்பு, விபத்தில் சிக்கியது. விமான நிலைய பகுதி அருகேவுள்ள குடியிருப்பு மீது திடீரென விமானம் விழுந்து நொறுங்கியது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த விமான விபத்தில் 97 பேர் பலியாகி இருப்பதாகவும், 2 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்ததால் அங்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அங்கு மீட்பு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி தொடர்ந்து சீலிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments