தென் அமெரிக்கா புதிய கொரோனா நோய்த் தொற்று மையமாகி வருகிறது-WHO

0 2364

தென் அமெரிக்காதான் கொரோனா தொற்று பரவும் புதிய மையமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஹைட்ரோ குளோரோக்குயின் மாத்திரைகளால் கொரோனா குணமாகிறது என்பதற்கு எந்தவித மருத்துவ சான்றும் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பிரேசிலிலும் தென் அமெரிக்காவிலும் மலேரியாவுக்கு எதிரான மாத்திரைகளுக்கு அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால நோய்கள் எதிர்ப்புத் திட்டத்தின் தலைவரான மைக் ராயன் தென்அமெரிக்காவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே காணொலி மூலமாக பேசிய யுனிசெப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்ரியட்டா ஃபோர் உலகம் முழுவதும் 8 கோடி குழந்தைகளுக்கு கொரோனா உலகளாவிய பாதிப்பால் இதர நோய்த் தடுப்பூசிகள் போட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அந்த குழந்தைகள் வேறு வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments