மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா உறுதி

0 935
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமான தாராவியில் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மட்டும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 478ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தாராவியில் பாதிக்கப்பட்டோரையும் சேர்த்து மகாராஷ்டிரா முழுவதும் 2 ஆயிரத்து 940 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 582ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் ஏறத்தாழ இது மூன்றில் ஒரு பகுதி என்பதால் அந்த மாநில மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments