கட்டுக்குள் வருமா கொரோனா? முழு வீச்சில் பணிகள் தீவிரம்

0 6072
தமிழகத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவுக்கு இரை ஆனோர் எண்ணிக்கை 100 - ஐ எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவுக்கு இரை ஆனோர் எண்ணிக்கை 100 - ஐ எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 700 ஐ தாண்டி உள்ளது.

கொரோனாவின் நிலவரம் குறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் தமிழகம் திரும்பியவர்களில் 92 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரே நாளில், கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்ததால், பலிஎண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 81 வயது ஆண் ஒருவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், 51 வயது மற்றொரு ஆண், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

தேனியில் 60 வயது ஆணும், செங்கல்பட்டில் 72 வயது மற்றொரு ஆணும் கொரோனாவுக்கு இரைஆனார்கள்.

கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 846 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி விட்டது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 415 சிறுமிகள் உள்பட மொத்தம் 902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

12 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 4 ஆயிரத்து 437 பெண்கள், 5 திருநங்கைகள் உள்பட மொத்தம் 12 ஆயிரத்து 677 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 449 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 178 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments