தனியார் மருத்துவமனைகளில் 80 சதவிகிதம் படுக்கைகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தது மகாராஷ்டிர அரசு

0 926

மகாராஷ்டிரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 80 விழுக்காடு படுக்கைகளைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள மாநில அரசு அவற்றுக்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் பெறுவதாகப் புகார்கள் வந்ததால் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வார்டுகளில் உள்ள படுக்கைகள், தனிமைப் படுக்கைக்கு அதிகப் பட்சம் ஒரு நாளுக்கு 4ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றும், வென்டிலேட்டர் இல்லாத ஐசியூ படுக்கைக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் என்றும், வென்டிலேட்டருடன் கூடிய ஐசியூ படுக்கைக்கு ஒன்பதாயிரம் ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20 விழுக்காடு படுக்கைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயித்துள்ள கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments