மதுரையில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு கொரோனா

0 836

மதுரையில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

திடீர் நகரைச் சேர்ந்த அந்த நபரிடம் வியாழக்கிழமை முழுவதும் விசாரணை நடத்தி, நள்ளிரவு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு தேனியில் உள்ள சப்- ஜெயிலில் போலீசார் அடைத்தனர். மருத்துவ பரிசோதனை முடிவில் கைதான நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து காவல் நிலையம், நீதிபதியின் இல்லம் மற்றும் சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. துணை ஆணையர் தொடங்கி அவரை விசாரித்த காவல் அதிகாரிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட்ட நபரை சிறையில் தனிமைப்படுத்தவும் அவரது குடும்பத்தாரை பரிசோதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments