சென்ட்ரல் ரயில்வே காவல்நிலையத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா

0 731

சென்னையில் இரயில்வே காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை சென்ட்ரல் இரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் காவல் ஆய்வாளர் உட்பட 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

57 வயதான இரண்டு உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த உதவி ஆய்வாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியதால் அவர்களுக்குத் தொற்று பரவியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொற்று ஏற்பட்ட காவலர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று பரவியுள்ளது. சென்னை எழும்பூர் கெங்குரெட்டி ரயில்வே காவலர் குடியிருப்பில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments