அமெரிக்க பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி

0 577

அமெரிக்காவில், கார்பஸ் கிறிஸ்டி (Corpus Christi) கடற்படை விமானத்தளத்தில், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்  சமூக வலைத்தளங்களில் ISIS மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளதாக FBI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிரியாவில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அடம் அல்சலி, டெக்சஸ் மாகாணத்தில், கடற்படைக்கு சொந்தமான விமானத்தளத்தில், பாதுகாவலர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டடதில், ஒருவர் படுகாயமடைந்தார்.

கடற்படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, FBI அதிகாரிகள் அவர் இல்லத்தில் சோதனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments