பாலைவனவெட்டுக்கிளிகளால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ 3800 கோடி கடனாக வழங்கும் உலக வங்கி

0 706
வெட்டுக்கிளிகளால் பெரும் பயிர் இழப்புக்கு ஆளாகி உள்ள ஆப்பிரிக்க-மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுமார் 3800 கோடி ரூபாய் ( 500 மில்லியன் டாலர்) நிதியை குறைந்த வட்டிக் கடனாகவும், மானியமாகவும் வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை 23 நாடுகளில் வெட்டுக்கிளிகள் கோர தாண்டவம் ஆடியுள்ளன.

இதனால் ஏற்கனவே பட்டினியில் வாடும் கிழக்காப்பிரிக்காவின் சுமார் இரண்டரை கோடி மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியின் போது இவற்றால் சுமார் 65000 கோடி ரூபாய் அளவுக்கு பயிரிழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக எத்தியோப்பியா, கென்யா,உகாண்டா ஆகிய நாடுகளுக்கு 1200 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments