கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு 52 லட்சத்தை தாண்டியது

0 664
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 லட்சத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 லட்சத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

உலகின் பல நாடுகளின் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், கட்டுக்கடங்காமல் நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 92 ஆயிரத்தையும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா 2ம் இடத்திலும், பிரேசில் 3ம் இடத்திலும், ஸ்பெயின், பிரிட்டன் ஆகியவை 4 மற்றும் 5ம் இடங்களிலும் உள்ளன.

இதில் கொரோனா மையமாக திகழும் அமெரிக்காவில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 200ஆகவும் அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 20 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் நோய் பாதிப்பு 2 லட்சத்து 80 ஆயிரமாகவும், பிரிட்டனில் 2 லட்சத்து 50 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல் அந்த 2 நாடுகளிலும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments