சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்வு

0 2570

சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களை அடுத்து திரு.வி.க. மண்டலத்திலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 795ஆக அதிகரித்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 699ஆகவும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 231ஆகவும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் ஆயிரத்து 32ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கடுத்து அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 926 பேருக்கும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 823 பேருக்கும், அண்ணாநகரில் 716 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து 3 ஆயிரத்து 62 பேர் குணமான நிலையில், 5 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுதவிர்த்து கொரோனாவுக்கு சிகிச்சை பலனிக்காமல் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments