இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகள் செயலிழந்த 10ஆம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுத அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை

0 938
நாள்பட்ட காசநோயால், இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ள சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, பொதுத்தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாள்பட்ட காசநோயால், இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ள சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, பொதுத்தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி பிரியதர்ஷினி. நாள்பட்ட காசநோய் காரணமாக கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வின் போது மாணவி திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.

பின்னர் இடுப்புக் கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயலிழந்ததையடுத்து, தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவிக்கு பள்ளியின் முதல்வர் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவி பிரியதர்ஷினி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் செங்கோட்டையன், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments