10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட கோவில் அர்ச்சகர்

0 17859
சென்னை மடிப்பாக்கம் அருகே 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவனை சிறுமியின் பெற்றோரே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மடிப்பாக்கம் அருகே 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவனை சிறுமியின் பெற்றோரே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 59 வயதான சிவக்குமார் என்ற அந்த நபர், கடந்த புதன்கிழமை அதே குடியிருப்பிலுள்ள 10 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் பயந்துபோன சிவக்குமார், தலைமறைவாகியுள்ளான்.

அதிகாலை 5 மணியளவில் யாருக்கும் தெரியாமல் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லலாம் என வீட்டுக்கு வந்தவனை உள்ளேயே வைத்து பூட்டிய சிறுமியின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிவக்குமாரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments