ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்காவின் கே கே ஆர் நிறுவனம் ரூ. 11,367 கோடி முதலீடு

0 703

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவின் கே கே ஆர் நிறுவனம் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க முதலீட்டு நிறுவனமான கே கே ஆர், 11 ஆயிரத்து 367 கோடி ரூபாயை முதலீடு செய்து ஜியோவின் 2 புள்ளி மூன்று இரண்டு விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கே கே ஆர் நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடாகும். இது கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்குக் கிடைத்துள்ள ஐந்தாவது முதலீடாகும்.

இதற்கு முன் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்கள் செய்த முதலீட்டையும் சேர்த்து ஒரு மாதத்தில்  ஜியோ 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments