ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் பயில யுஜிசி ஒப்புதல்

0 4045
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் பயில யுஜிசி ஒப்புதல்

 மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஒரு பல்கலைக்கழகத்தில், முழுநேரமாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலைக்கழகம் அல்லது வேறொரு பல்கலைக்கழகத்தில் தொலைதூரை கல்வி மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரியை பயிலலாம் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

நாளுக்குள் நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் எனவும் யுஜிசி கூறியுள்ளது.

இதனால், மூன்று ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். ஏற்கனவே அமலில் இருந்த இந்த நடைமுறை, கடந்த 2016 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments