சென்னை புளியந்தோப்பில் எகிறும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன ?

0 4050
சென்னையில் கொரோனா அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்று புளியந்தோப்பு. தொடக்கத்தில் இருந்தே இந்த பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னையில் கொரோனா அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்று புளியந்தோப்பு. தொடக்கத்தில் இருந்தே இந்த பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை மாநகராட்சியின் 6-வது மண்டலமான திரு.வி.க நகர் மண்டலத்திற்குள் வருகிறது புளியந்தோப்பு பகுதி. கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு எப்படி கோயம்பேடு காரணமோ, அப்படி திரு.வி.க நகர் மண்டலத்திற்கு புளியந்தோப்பு.

சென்னையில் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவுவதற்கு முன்பே புளியந்தோப்பில் மட்டும் பாதிப்பின் எண்ணிக்கை 100-க்கும் மேல் கடந்திருந்தது. தற்போது திரு.வி.க நகர் மண்டலத்தில் ஆயிரத்தை தொட்டுள்ள பாதிப்பின் எண்ணிக்கையில் 300 பேர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள். Out

ஊரடங்கு அறிவிக்கபட்ட மார்ச் மாத இறுதியில் புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் பகுதியில் தேவாலயம் ஒன்றில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 4 பேருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் அதன் மூலம் எண்ணிக்கை அதிகரித்து ஆசிர்வாதபுரம் பகுதியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 40 பேருக்கும் மேல் உயர்ந்ததாக களப்பணியில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்கின்றனர் அதிகாரிகள். இந்த தொடர்புகள் மூலம் புளியந்தோப்பில் உள்ள குருசாமி நகர், சிவராஜபுரம், சுந்தராபுரம், தட்டாங்குளம், அய்யாவு தெரு, அன்சாரி தெரு ஆகிய பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

கொரோனா இங்கு வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக கூறுவது இங்குள்ள மக்கள் தொகை தான். நெருக்கடியான இடத்தில் 10 ஆயிரம் வீடுகள் உள்ள இந்த 77ஆவது வார்டில் மட்டும் 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

பெரும்பாலும் குடிநீர் லாரிகளில் வரும் குடிநீருக்காக கூட்டமாக நிற்க வேண்டிய சூழல், ஒரு பகுதிக்கு ஒன்று என்ற கணக்கில் உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்தும் சூழல் இங்கு நிலவுவதும் கொரோனா வேகமாக பரவுவதற்கான முக்கிய காரணம். இது ஒரு பக்கமிருக்க இன்றும் இந்த பகுதி மக்களோ மாஸ்க் இல்லாமல் இயல்பாக வெளியில் வந்து செல்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைத்து வகையான கடைகளும் கேட்பார் இல்லாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளன. Out

திரு.வி.க நகர் மண்டலத்தில் உள்ள 124 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 60 சதவீதத்திற்கு மேல் புளியந்தோப்பு பகுதியில் தான் உள்ளன.  இங்கு கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் முறையை இந்த பகுதியிலும் மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments