2020 ஆண்டிலேயே தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று பதிவு

0 7623
தமிழகத்தில் நடப்பு ஆண்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று 42.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று 42.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 42.5 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியலும், திருச்சியில் 41.4 டிகிரி செல்சியசும், மதுரை விமான நிலையத்தில் 41.2 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.

கடலூரில் 40 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 39.2 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 21.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments