உயரும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர கடும் போராட்டம்

0 2942
சென்னையில் ஒரே நாளில் 567 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் 9 ஆயிரத்தை நோக்கி உயர்ந்து வருகிறது.

சென்னையில் ஒரே நாளில் 567 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் 9 ஆயிரத்தை நோக்கி உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்தித்து வரும் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 567 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தொடும் வகையில் உயர்ந்து வருகிறது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 34 பேர் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 42 பேருக்கும், காஞ்சியில் 13 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுதவிர, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் தலா 5 பேரும், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேரும் பாதிக்கப்பட, தேனி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 15 மாவட்டங் களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை .
அதேநேரம், ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப் பட்ட 6 ஆயிரத்து 282 பேரில் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 48 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில், 62 வயது ஆண், 50 வயது ஆண் மற்றும் 58 வயது பெண் ஆகியோர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். சென்னையைச்சேர்ந்த 60 வயது ஆண், 47 வயது ஆண், 60 வயது ஆண் மற்றும் 80 வயது ஆண் ஆகிய 4 பேரும், தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இரை ஆன 94 பேரில், சென்னையைச் சேர்ந்த வர்கள் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் 8 பேரும், செங்கல் பட்டில் 5 பேரும் கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 7 ஆயிரத்து 588 பேரில், 5 ஆயிரத்து 681 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனாவால், சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது.

12 வயதுக்குட்பட்டோரில் மொத்தம் 856 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 13 முதல் 60 வயது வரையில் 12 ஆயிரத்து 26 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments