கொரோனா தொற்றுக்கு ஆளானதை கண்டுபிடிக்கும் செல்போனை கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் சேர்ந்து அறிமுகம் செய்துள்ளன

0 2009
கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனரா என்பதை மக்களுக்கு தானாகவே அறிவிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தை கூகுளும், ஆப்பிளும் இணைந்து அறிமுகம் செய்துள்ளன. இந்த தொழில்நுட்பம் புளூடூத் அடிப்படையில் இயங்கக்கூடியது.

இதற்காக முதலில் இதற்கான மென்பொருளை  செல்போனில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதே மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துள்ள  வேறு  நபர்களுக்கு தொற்று உறுதியானால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு  ஆட்டோமேட்டிக்  எக்போஷர் தகவல்கள் அனுப்பப்படும்.

அதை வைத்து அவர்கள் தங்களுக்கு தொற்று பரவியுள்ளதா என உறுதி செய்து கொள்ள முடியும். அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவுவதை வேகமாக தடுக்க இது உதவும் எனவும் இந்த இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments