நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்-ரயில்வே அமைச்சர்

0 1269

நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அடுத்த 2 மணி நேரத்திலேயே 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தற்போது IRCTC இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் மே 22 முதலும், அடுத்த 2-3 நாட்களில் வெவ்வேறு ரெயில் நிலையங்களின் கவுண்டர்களிலும் முன்பதிவு மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரயில் நிலையங்களில் கடைகளை திறந்து பார்சலாக மட்டுமே விற்பனை செய்யவும் விரைவில் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments