நாட்டில் படிப்படியாக விளையாட்டு நடவடிக்கைகளை துவக்க முடிவு

0 862

விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விளையாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டிகளை படிப்படியாக துவக்க சாய் எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வழிகாட்டல் நெறிமுறைகளை அது வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொடுதல் தேவையில்லாதவை, ஓரளவு தொடுதல், முழுமையாக தொடுதல் மற்றும் நீச்சல் என 4 விதமாக விளையாட்டுகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 4 வகைகளுக்கான பயிற்சிகளுக்கும் தனித்தனியாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படுவதாக சாய் தெரிவித்துள்ளது.

அது போன்று விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியும் பகுதி பகுதியாக வழங்கப்படும் என்றும் வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் சாய் பணியாளர்கள் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments