வரி வருவாயில் மாநிலங்களின் பங்கைக் கணிசமாக உயர்த்த வேண்டும்-மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 681

வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 41 விழுக்காட்டில் இருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15ஆவது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரி வருவாயை முறையாகப் பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நிதி நெருக்கடியைத் தவிர்க்க, மாநிலங்களின் வரிப் பங்கைத் தற்போதைய 41 விழுக்காட்டில் இருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments