விமானக் கட்டணங்களை அரசே முடிவு செய்யும் என தகவல்

0 2089

வரும் 25 ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விமானக் கட்டணங்களை நிச்சயிப்பதில், அரசின் கட்டுப்பாடு இருக்கும் என கூறப்படுகிறது.

குறைந்த பட்ச கட்டணம், அதிக பட்ச கட்டணம் ஆகியவற்றை அரசே முடிவு செய்யும் என விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா காலம் நீடிக்கும் வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், சிவப்பு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் மிகவும் பரபரப்புடன் இயங்கக்கூடிய சென்னை, மும்பை விமான நிலையங்களில் அதிக பரபரப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments