மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 61 விழுக்காட்டினர் மும்பையைச் சேர்ந்தவர்கள்

0 967
மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகம்

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 61 விழுக்காட்டினர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இவர்களில் 35 விழுக்காட்டினர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளனர். 

இந்திய அளவில் கொரோனா நோயாளிகளில் உயிரிழப்பு விகிதம் மூன்று புள்ளி பூஜ்யம் ஒன்பது விழுக்காடாக உள்ளது. மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு விகிதம் மூன்று புள்ளி ஐந்து ஏழு விழுக்காடாக உள்ளது.

தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் 35 விழுக்காட்டையும், தமிழகம் 11 புள்ளி ஆறு ஆறு விழுக்காட்டையும் கொண்டுள்ளன. குஜராத் 11 புள்ளி மூன்று ஏழு விழுக்காட்டையும், டெல்லி ஒன்பது புள்ளி எட்டு விழுக்காட்டையும் கொண்டுள்ளன. இந்த நான்கு மாநிலங்களும் சேர்ந்து நாட்டின் மொத்தப் பாதிப்பில் 67 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments