உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 51 லட்சத்தை தாண்டியது

0 778

உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  51 லட்சத்தை தாண்டியுள்ளது. நோயிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும், உலக அளவில் 20 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்திருப்பதால், நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. நேற்று 50 லட்சத்தை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தாண்டிய நிலையில், இன்று 51 லட்சத்தை கடந்துள்ளது.

இதேபோல் உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நோய் பாதிப்பிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் 27 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

உலகின் கொரோனா மையமாக உருவெடுத்துள்ள அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 94 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரத்தையும், பலி 3 ஆயிரத்தையும் கடந்துள்ளது. பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியும் கணிசமாக அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஈரான், இந்தியா, பெரு ஆகிய நாடுகளிலும் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments